முன் குறிப்பு: தரமணி படம் பார்த்தவர்கள் மட்டும் படிக்கவும்
இன்று..
நவம்பரால் ஏற்பட்ட ஓர் மழைக்கால மெட்ராசு பொழுது..
அதுவும் இனிமையான இரவுப் பொழுது..
தரமணி படம் கண்டு..
பின் தேனி ஈஸ்வரை பாராட்ட சோம்பல் கொண்டமையால்..
தரமணி ரயில் நிலையம் அருகே நிற்காமலும் ஒதுங்காமலும் ஒரு நிலையில் இருந்தேன்..
ஒரு ரயில் வண்டி கொஞ்சம் வேகமாய்..
மழை தூறல்களோடு விளையாடி கொண்டு..
முதல் பெட்டியில் ஒரு காவலர் கதவோரமாய்..
அடுத்த பெட்டியில் டை கட்டிய ஒருவனின் வெறித்த பார்வையாய்..
அடுத்த பெட்டியில்..
அடுத்த பெட்டியில்..
vendor பெட்டியில் பாட்டி ஒருத்தியின் கருவாட்டு கூடை வாசனையாய்..
அடுத்த பெட்டியில்..
அடுத்த பெட்டியில்..
என்று செல்ல செல்ல மனமோ..
ஏன் முதல் பெட்டியில் மட்டும் காவலர் இருந்தார்?
கருவாடு திருடுபவர்கள் இவ்வுலகில் இல்லையோ?
அடுத்த பெட்டியில்..
அடுத்த பெட்டியில்..
கடைசி பெட்டியில் யாருமில்லாததால்..
அதில் என் மழை துளிகளை ஏற்றி..
அந்த நைட் கான்ஸ்டபிளிடம் வீனசை பற்றி விசாரிக்க அனுப்பினேன்..
