Tuesday, 23 August 2016

M119இல் ஓர் இளங்காலை பயணம்


தொட்டுத் தொடாமல் சிறகடிக்கும்
சன்னலோர பட்டாம்பூச்சிக் கண்கள்..
அக்கண்களின் வண்ணம் நாங்களென
தொங்கி வரும் ஆண்மைகள்..

அவ்வாண்மைகளை கண்டித்த 
முதிர்பெண்மைகள்..
அவ்வாண்மைகளை கண்டு ஏங்கிய 
முதிர்ஆண்மைகள்..

எனத் தொடரும்
M119இன் இளங்காலை பயணம்,
டாலர் நிறுத்தம்
நெருங்கிய தருணம்..

பின்னல் கூந்தலும்
நீட்டிய கைகளும்
காற்றுத்திடலில் போட்டியிட..
ஏமாற்றி கால்கள் செயிக்க..

பின் அவளின் அம்மூன்றும்
'அவளாக' சமாதானமாகி
அவனிடம் மகளிர் இருக்கையை
பரிசாய் பிடுங்கின..

அவளுக்கெங்கே தெரியும்
ஏச்சுகள் கொஞ்ச
அவன் அப்பரிசை
நித்தம் வாங்கி வருவதை..

#மெட்ராசு பயணங்கள் #மெட்ராசு நினைவுகள்

படத்தை கடன் அளித்தவர்: www.skyscrapercity.com

No comments:

Post a Comment