Tuesday, 7 June 2016

பள்ளிக்கரணை ஏரியினூடே ஓர் முயல்-ஆமை பந்தயம்


பள்ளிக்கரணை ஏரியை தார்கொண்டு கிழித்த பாதையிலே,
மழைவரும் பின்னே
நான் வருவேன் முன்னே என,
வாயுபகவான் போகிறபோக்கிலே
மண்பூக்களை வருடி தெறிக்கவிட,
வருடியகாதலை ஏற்ற மண்பூக்கள்
ஒப்புதலாய் சந்தன வாசம் தெளிக்க,
அவ்வாசனையை நுகரமறுத்த
கண்ணாடி வேலியிட்ட
ஓர் முயல்வண்டிக்கும்,
அவ்வாசனையை சுவாசமாக்கி
அச்சுவாச மிதப்பிலே செலுத்தப்பட்ட
ஓர் ஆமைவண்டிக்கும்,
ஓர் பந்தயம்.
சுவாச மிதப்பு தலைக்கேறிய ஆமைவண்டி
கனவில் பயணப்பட,
வெற்றியை (?)நோக்கி முன்னேறியது
அந்த முயல்வண்டி.

(மழை-சந்தோஷ் நாராயணன் இணை மட்டுமல்ல சுகம்,
மழைக்கு முற்பட்ட ஈரக்காற்றும் அதைக் கிழிக்கும் ஓர் மிதிவண்டிப் பயணமும் கூட சுகமே <3 )

#மிதிவண்டி பயணங்கள்  #மழைக்கு முன் ஓர் முத்தம்

No comments:

Post a Comment