Thursday, 26 May 2016

மறப்பது நினைப்பதற்கே !

ஒவ்வொரு முறையும் முதல் முறை போல,
உன்னை காண விருப்பம் கொண்டு,
உன்னை மறக்கும் எண்ணம் கொள்கிறேன்.
படிப்படியாய்..
முதலில் கண்ட நாளை,
அன்றுதான் மீண்டும் பிறந்ததாம் ஒருகாளை.
பின்பு ஒற்றை முடி ஆடலை,
அதற்கேற்று ஆடிய இலையசைவை.
பின்பு  கண்களின் கபடி விளையாட்டை,
அதில் தோற்றபின் வந்தஎன் முதல் வெட்கத்தை.
பின்பு கால்களின் குதிரை பயணத்தை,
அப்பயணத்தில் ஜாக்கியாகிய கனவுகளை.
பின்பு கன்ன பல்லாங்குழியை,
அதில் நான் போட்டு விளையாடிய அச்சாங்கல்லை.
பின்பு கழுத்தோர வியர்வை கொலுசை,
அதில் குலுங்கிய இசையை.
பின்பு உன் உடை உருவாக்கிய வானவில்லை,
அதுகாண பெய்த மழையை.
பின்பு என்னவென்று விவரிக்க இயலா சிரிப்பை,
அதில் பிறந்த என்னவென்று சொல்ல இயலா உணர்வை.
பின்பு என் மனதான உன் மனதை,
அதில் கழிந்த ஓர் சிறிய இரவை.
பின்பு என்னை,
என்னை சுற்றும் எண்ணிலடங்கா உன்வாசனைகளை.
பின்பு இவ்வுலகை,
இவ்வுலகில் உன்னைதீண்டிய குளிர்காற்றை.
பின்பு ஏதும் இல்லா அண்டத்தை,
அவ்வண்டதின் கருப்பு நிறத்தில் தெரிந்த உன் உருவத்தை.
பின்பு ஏதும் இல்லா நிலையில்,
உன்னை மறந்த நிலையில்,,
ஓர் நட்சத்திரம் !
வானவில்லை ஒளிச்சிரிப்பாய் கொட்டி,
குதிரைபோல் நகரவே..
நானும் ஜாக்கியாய் பின்னே பறக்கவே…!!

No comments:

Post a Comment