Tuesday, 14 February 2017

முதற்பெட்டிக்கும் இறுதிப்பெட்டிக்குமான முடிவிலி இடைவெளி


வேண்டுமென்றே நேரம் கடத்தி
அடித்து பிடித்து
இறுதிப் பெட்டியில் ஏறிக் கொண்டேன்
முதற்பெட்டிக்கு இணையாய் நடைமேடையில் அவள்..

இறுதிப்பெட்டியாய் இருந்தால் என்ன..
நெருங்கி இழுத்தாள்
எப்படியும் வந்து விடுவாள்
என்ற ஆணவத்தில் கை நீட்டினேன்

தொடர்வண்டி முன்னேற
நடைபாதை நீள
அதில் முடிவிலியாய்
முதற்பெட்டிக்கு ஈடாய்
அவள் நடக்க..
நான் குழம்பினேன்

முதற்பெட்டியில் எனக்காய் காத்திருந்து
பின் காத்திருக்கவும் இயலாமல்
விலகவும் இயலாமல்
நடைபாதையில் முடிவிலியாய் தவிக்கிறாள்
என்பதை அறியாமல்
கைநீட்டிய வண்ணம் இருந்தேன்..

அன்றும் எனக்குப் பிடித்த
ஒற்றைச் சடை பின்னி
வந்திருந்தாள்..

No comments:

Post a Comment