Saturday, 25 February 2017

அனைத்தும் பயணங்களே


வீட்டிற்கும் பாலங்காடிக்கும்
ஓர் பயணம்..
இரவு காவலின் சோம்பல் முறிக்கும் பைரவன்,
வாசலில் எறும்பிற்கு அன்னமிடுபவள்,
தொந்திக்கும் கைக்கும் ஓட்டப் பந்தயம் நடத்துபவன்,
செய்திகளை புறாக்களாய் பறக்க விடுபவன்
என சக பயணிகளை தேடும்
 சக பயணிகள்..
எல்லாரும் இமாலயா சிரபுஞ்சி செல்வதில்லை,
ஆதலால் சாலையோடு மட்டும் கண்கோர்த்து காதல் செய்யத் தேவையில்லை..

படத்தை கடன் அளித்தவர்www.tommyschultz.com

No comments:

Post a Comment