உன்னைத் தொலைத்த ஓர் முடியா இரவில்,
இடி அழுகை..
மின்னல் கண்கள்..
பேய்மழை கண்ணீர்..
என வைரமுத்துவாய் அழகியலில் வருந்த எண்ண,
முடியா இரவில் ஏதடா அழகென
பின்மண்டை பேய் எகிறி அடிக்க,
சத்தமில்லா அழுகை..
நிலைகுத்திய கண்கள்..
வறண்ட கண்ணீர்..
என புதுக்கவிதையாய் வருந்த எண்ண,
முடியா இரவென்றாலும் கிட்டும் அழகடா அவளென
முன்மண்டை தேவதை வருடி கொடுக்க,
ஊஞ்சல் எண்ணங்களில் குரங்கு மனம் தாவ,
வருத்தப்படவும் இயலாமல்..
உன்னைத் தேடவும் முடியாமல்..
தூங்கிப் போகிறேன்.
இரவேனும் முடிந்துவிடக் கூடுமென்று..
ஆனால் அங்கே கற்பனை கவிதையாய் நீ..!!
இடி அழுகை..
மின்னல் கண்கள்..
பேய்மழை கண்ணீர்..
என வைரமுத்துவாய் அழகியலில் வருந்த எண்ண,
முடியா இரவில் ஏதடா அழகென
பின்மண்டை பேய் எகிறி அடிக்க,
சத்தமில்லா அழுகை..
நிலைகுத்திய கண்கள்..
வறண்ட கண்ணீர்..
என புதுக்கவிதையாய் வருந்த எண்ண,
முடியா இரவென்றாலும் கிட்டும் அழகடா அவளென
முன்மண்டை தேவதை வருடி கொடுக்க,
ஊஞ்சல் எண்ணங்களில் குரங்கு மனம் தாவ,
வருத்தப்படவும் இயலாமல்..
உன்னைத் தேடவும் முடியாமல்..
தூங்கிப் போகிறேன்.
இரவேனும் முடிந்துவிடக் கூடுமென்று..
ஆனால் அங்கே கற்பனை கவிதையாய் நீ..!!
No comments:
Post a Comment