இன்றேனும்
காக்கைக்கு இறக்கை கொடுத்துவிட
ஓவியப் புத்தகத்துடன்
அலமாரி அடியே ஒண்டினாள்
ப்ரியா குட்டி..
இறக்கை வரைந்து
வானவில் வண்ணமிட்டு
பற பற காக்கா..பற பற
எனப் பாட
வான்குறி நோக்கி
அம்பாக காக்கா எத்தனிக்கையில்
'இங்கயாடி இருக்க?
போய் ஒழுங்கா வீட்டுப்பாடம் பண்ணு'
என இரைந்த அம்மா
காகத்தை அலமாரி சிறையில் அடைத்து..
பின்
மாயவெளிச்சம் நோக்கி
இழுத்துச் சென்றாள்..
இரவில் தொடரப்போகும்
கருத்த அழுகுரலை எண்ணி
விசனப்பட ஆரம்பித்தாள்
ப்ரியா குட்டி..
உருவகம்:
காகம்: ப்ரியா குட்டியின் கனவுகள்
படத்தை கடன் அளித்தவர்: www.pintrest.com

No comments:
Post a Comment