கல்லூரி சென்ற பெண்
காப்பி பெண்ணாய் மாறி
வெட்க மாப்பிள்ளையை கவிழ்க்க..
இரண்டாம் ஆட்ட சினிமாவிற்குப்
பின் பிய்யும் விளக்கமாற்றை காப்பாற்ற..
கொடுவா மீசை மாமனின்
சுட்டி மகளை காதலிக்க..
கண்ணாமூச்சசியில் ரகசியப்படை வீரனாய்
மறைந்து ஜெயிக்க...
களவாட வந்த கயவனுக்கு
தோதாக வழி கொடுக்க..
அநியாய வட்டி ஆறுமுகனின்
ஏச்சிலிருந்து தப்பிக்க..
எனப் பலவாறாய் நீ துணை செய்ய..
உன்னை
ஒன்றாம் தேதியில்
இரண்டாவது மாடியில்
மூன்றாவது படுக்கையறையில்
நாற்புறங்களிலும் தேடுகிறேன்
ஐம்புலன்களையும் அடக்கி..
ஆறாம் எண் பஸ் பிடித்து
ஏழு மணிக்குள் வந்துவிடடி
எட்டுப்பட்டியிலும் ராசாத்தியாய் இருந்தவளே..
அதுசமயம்,
'இல்லாத இனிப்பு கனவுப்பொருளாம்
அந்தக் கனவும் இவனுக்கு பலிக்குமாம்'
என இளித்துக் கொண்டே
காற்றில் வந்தது
வீட்டுச் சொந்தக்காரனின் வசவுகள்..
படத்தை கடன் அளித்தவர்: www.pintrest.com

No comments:
Post a Comment