விடியா இரவின்
தூக்க மெட்டுக்கள்,
காதல் தொலைதலின்
கனவு மெட்டுக்கள்,
திறவா கதவின்
சாவி மெட்டுக்கள்,
அடைத்த சன்னலின்
காற்று மெட்டுக்கள்,
வற்றா கண்ணீரின்
புன்னகை மெட்டுக்கள்,
மாநகர வாழ்வின்
மண் மெட்டுக்கள்,
என
ஓர் போதைக் கலைஞனின் இதயக்கூட்டினில்,
ஓர் சனிக்கிழமை இரவினில்,
பிறந்து நீள்கிறது இசை..
படத்தை கடன் அளித்தவர்: http://www.youthareawesome.com/

No comments:
Post a Comment