Tuesday, 16 August 2016

விக்கல்


ரயில் கிழித்த வயலினூடே
ஆட்டப்பட்ட குட்டிக் கைகளுக்கும்,

எங்கோ பாடிய வலையோசைக்கு
ஆட்டம் பழகிய சன்னலோரக் கூந்தலுக்கும்,

துரத்திச் செல்லும் பெட்டிகளின் ஊடே
சந்தித்த எதிர்நடைபாதை கண்களுக்கும்,

ஒற்றைக்கால் தவத்தில் காப்பாற்றப்பட்ட
மாநகரப் பேருந்தின் கடுத்த பாதங்களுக்கும்,

பருவத்தின் முதல் மழையின்
முதல் மழைத்துளி வழிந்த கன்னங்களுக்கும்,

இவை அனைத்தையும் கல்வெட்டாய்
மனதில் செதுக்கிய கவிதைகளுக்கும்,

என்னுடைய ஞாபகம் மீண்டு
விக்கல் வரின்
தூது அனுப்பவும்..

நானே வருவேன்
அதிர்ச்சி வைத்தியமாய்..

படத்தை கடன் அளித்தவர்: பி.சி.சிரிராம்

No comments:

Post a Comment