Sunday, 28 August 2016

நாள் முழுதும்


நிறுத்தமில்லா பேருந்தாய்
புள்ளிக்குப்புள்ளி பயணமாய்
தலை முதல் பாதம் வரையாய்
குளியல் பயணத்தின் போதும்,

திறக்க இயலா சன்னலாய்
எங்கோ வெறித்த பார்வையாய்
நடத்துனரின் சில்லறை திட்டுகளாய்
பேருந்து பயணத்தின் போதும்,

தொடர்வண்டியின் இலக்காய்
கடைகன்னி விற்பனையாளின் சிரிப்பாய்
கடந்த மிதிவண்டியின் வேகமாய்
விடைகாணும் மனப்பயணத்தின் போதும்,

ஆழ்மனம் மறுத்த வார்த்தையாய்
இயற்கை ஒளித்த  உவமையாய்
சாவி தொலைத்த மனக்கதவாய்
இக்கவிதை பயணத்தின் போதும்,

ஒலித்து மறைந்து பின்
ஒலிக்கின்றன..
அதிகாலை காகித சிறுவனின்
எறிதல் உருவாக்கிய
காற்று வெற்றிடத்தை நிரப்பிய
அவனின் பாடல் முணுமுணுப்புகள்..

படத்தை கடன் அளித்தவர்: www.fiverrcdn.com

No comments:

Post a Comment