Thursday, 28 July 2016

விமோசனச் சிரிப்பு


காலை வருடிய சிப்பியை
காதோரம் பொருத்தினாள் சிறுமி

வினையான விளையாட்டின்
நண்பா வென்னும் கதறலும்,

'இந்த அபலனை ஏற்றுக்கொள் கடல்மாதா'
எனப் பாய்ந்த அபலக் குரலும்,

குண்டடிபட்ட கடலாளனின்
எதற்கென்ற குழப்பக் குரலும்,

வலையில் சிக்கிய துள்ளலின்
துடிக்கும் சாவுக் குரலும்,

என மற்றும் பலக்குரல்களும்...

முத்தின் கருவறைச் சிரிப்பு
மட்டுமேனோ கேட்டபாடில்லை..

முத்துச் சிரிப்பை உள்ளே திணித்து
அது வழிய அது வழிய
தூது அனுப்பினாள் சிறுமி
முத்தாக்கித் தரும்படி..

அதுசமயம்
முடிவிலி தொலைவில்
கடல்மாதாவின் கருவறையில்
கதறலும்
அபலக் குரலும்
குழப்பக் குரலும்
சாவுக் குரலும்
விமோசனத்தை எதிர்நோக்கின..

படத்தை கடன் அளித்தவர்: 500px.com

No comments:

Post a Comment