Wednesday, 15 February 2017

அலைகளை தேடி


அலைகள் எங்கே பிறக்கின்றன
என அறிய ஆழ கடலாடினேன்
சிறு மீன்கள் பார்த்துக் கொண்டிருந்தன
சிறிய பெரு மீன்கள் சிரித்து கொண்டிருந்தன
பெரு மீன்கள் ஆடிப்பாடி கொண்டிருந்தன
திமிங்கலங்கள் தாலாட்டு பாடிக் கொண்டிருந்தன
ஏனோ அலைகளின் பிறப்பிடம் தெரியவில்லை
ஏமாற்றத்தில் கரை திரும்ப
ஓர் அலை 'ஓ' வென்ற அறைகூவலோடு
கால்களை நனைத்து சென்றது

பி.கு:
உருவகங்கள்::
கடல்: நீ
அலை: காதல்
சிறு மீன்கள்: முகமறியாதவர்கள்
சிறிய பெரு மீன்கள்: உறவினர்கள்
பெரு மீன்கள்: நண்பர்கள்
திமிங்கலங்கள் : தாய் தந்தையர்

Pic Courtesy: https://ilaselene.files.wordpress.com/2013/11/waves-of-emotion.jpg

No comments:

Post a Comment