'தூர போய் நின்று கொண்டேன்' என முடிந்தால் கவிதைக்கு நல்ல முடிவாய் இருக்கும் என எண்ணி..
அதற்கேற்ற பாடுபொருளைப் பிடிக்க..
மழை..
காற்று..
காதல்..
தனனானா..தனனானா..
மற்றும் பல என..
அலைந்து திரிந்து சோர்ந்து ஒரு மரத்தினடியில் நிற்க அதன் நிழலாய் வந்தாய்..
நேரத்துடன் போட்டி போட்டு நெருங்கினாய்..
மரத்தையா என்னையா என தெரியாவிட்டாலும்..
கவிதைக்கு நல்ல முடிவு கிடைக்காவிட்டாலும்..
ஒரு கை பார்பதென நின்று விட்டேன்..
என் மீதேறி மரத்திலேறி சென்று விட்டாய்..
ஒரு சிறிய ஆட்டத்துடன் இலைகள் சரிய என் ஏக்க பெருமூச்சு அவைகளை கட்டித் தழுவின..
பின் இருவரும் கிளை கோர்த்து வேடிக்கை பார்த்தோம்..
தூரங்களில் கட்டித்தழுவல்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன..
இப்போது நீதான் தூர போய் நின்று கொண்டாய்..