Wednesday, 27 September 2017

இது காமக் கவிதை அல்ல..

நேற்று கடையில் ஒரு தலையணை வாங்கி வந்தேன்..
இரவுவரை பொறுக்க முடியாமல் அலுவலகத்தை துறந்துவிட்டு காலையிலேயே படுத்து விட்டேன்..
முதலில் தடவி பார்த்தேன்..
பின் கட்டிப் பிடித்து உருண்டேன்..
பின்னிப் பிணைந்தேன்..
பூ தையல்களை அவிழ்த்து விட்டு அவற்றை கொத்தாக பற்றிக் கோதினேன்..
பின் என் மீது படுக்க வைத்துக் கொண்டேன்..
தலையணையின் தலையில் தட்டிக் கொடுத்து தூங்க வைத்தேன்..
பின்பு ஒரு வழியாய்..
இத்தனை நாளாய் தொலைத்த கனவுகளை தேடிச் சென்றேன்..

Sunday, 24 September 2017

உண்ட இந்த கதைய சொன்னது இல்லைல..?

உன்ட சொன்னது இல்லைல..?
செரி சொல்றேன் இரு..
முன்னமே சொல்லிருந்தா ஞாபகம் வந்ததும் நிறுத்திடு ..சரியா?
அலையோட ஒரு விளையாட்டு இருக்கு..
அது வரப்போ ஓட்றதும்..
அது போறப்போ தொரத்துரதும்ணு ..
அது மேல நான் பட்டா அது அவுட்டு..
என் மேல அது பட்டா நான் அவுட்டு..
அடிக்கடி விளையாடுவோம்..
அன்னிக்கும் அப்படித்தான்..
ரொம்ப நேரம் விளையாண்டுட்டு இருந்தோம்..
என் கால் அதுக்கு புடிக்கும்..
அது துளி எனக்கு புடிக்கும்..
ரெண்டு பேர்க்குமே தெரியும் தான்..
ஆனா என்ன பண்ண?
அப்டி அன்னிக்கு விளையாண்டுட்டு இருந்தப்போ தான் நெனச்சேன்..
உண்ட இந்த கதைய சொன்னனா இல்லையானு..
சொல்லல தான?