Saturday, 10 September 2016

குத்திக் கிழிக்கிறான் ஓர் அட்டக்கத்தி


தூர தேசத்தவளை
தூர பார்வையில் மறைந்தவளை

அவ்வளோதான் என சிரித்தவளை
அவ்வளோ முறைத்தவளை

சன்னல் ஓரம் சாய்ந்தவளை
சன்னல் கீற்று கூந்தலாளை

மணப்பெண் தோழியாளை
மணப்பெண்ணுக்கு முன்னானவளை

வழி சொன்னவளை
வழி நெடுக பயணித்தவளை

மாடு மேய்த்தவளை
மாடாய் தலையாட்டி பேசியவளை

கோலியில் செயித்தவளை
கோலி கண்ணாளை

பல்லாங்குழி ஆடியவளை
பல்லாங்குழி கன்னத்தவளை

ஆங்கில பாடம்  எடுத்தவளை
ஆங்கில சினிமா நிக்கோலை

உறவு மாறா நண்பியாளை
உறவு அறியா அவளை

என பலரையும்
குத்திக் கிழிக்கிறான்
ஓர் அட்டக்கத்தி..
வலிக்கிறதா யாருக்கேனும்? ;)

படத்தை கடன் அளித்தவர்: www.indianscinemagallerys.blogspot.com

No comments:

Post a Comment