Friday, 18 November 2016

கடவுளை 'கடவுள்' ஆக்கப் போறேன்


எதற்கோ கோபம்
ஏதன் மேலயோ கோபம்
வெளிவரா கோபம்
கண்கள் விரியும் கோபம்

கண்கள் விரிய விரிய
தாளத்திற்கு ஏற்ப ஆடும் குரங்காய்
எதிரே காகிதப்பை ஒன்று விரிந்தது

வியப்பில் கண்கள்
விரிக்க விரிக்க..
காகித பையும்
விரிய விரிய..
மோடியின் வெளிநாட்டுப் பயணமாய்
இவை நீள நீள..

கண்கள் வலிக்குதுபா என மூடிக் கொண்டேன்..
கோபம் தனிய திறந்தேன்
கசங்கிய காகித பையின் முன்னே..

பயந்து வீட்டிற்கு சென்றேன்
நுழையும் பொழுதில் அலங்கார பெட்டி
பட்டாம்பூச்சியை பார்த்து கண்ணடிக்க
அதும் சிறகை அடித்து ஆமோதித்தது..

உயிர் கொடுக்கும் கடுவுளாய்
மாறிவிட்ட பயம் எற
சோதனையில் இறங்கினேன்..

பூத்துண்டு பறவையாய் சிறகடித்தது
நூல் மண்புழுவாய் வெயிலில் துடித்தது
அலைபேசி இயந்திர மனிதனாய் மாறி
ஐசுவர்யா ராய் கேட்டது
எதிர்வீட்டு இருசக்கர வண்டி இருகால் புலியாகி
செய்வதறியாது நின்றது
அருகில் நான்கு கால் மான் அதனை ஏய்த்தது..

உறுதி ஆகிவிட்டது
கடவுள் ஆகிவிட்டேன்

அந்த தஞ்சாவூர் பொம்மையை வர சொல்றா
அந்த பார்பி பொம்மையை வர சொல்றா
அய்யோ..
இப்போ நான் எதுக்காவது உயிர் கொடுத்தே ஆகணுமே
என கால் பரபரக்க
மூளையோ வேறு பக்கம் பறந்து
முக்கிய இரையை தேடிக் கொடுக்க
தெருமுனை கல் சாமியை நோக்கி ஓட ஆரம்பித்தேன்..


படத்தை கடன் அளித்தவர்https://media3.giphy.com

No comments:

Post a Comment