அஞ்சலி படத்தில் இந்த காட்சிகளையும்..
நந்தலாலா படத்தில் இந்த காட்சியையும்..
இரண்டிலும் கதாபாத்திரங்கள் சுவரோடு ஆனந்தம் கொள்கிறார்கள்..
அவர்கள் தங்களின் அரவணைப்பை சுவர்களில் தேடி கொள்கிறார்கள்..
அவர்களுக்கு பற்றி கொள்ள ஏதேனும் தேவைப்படுகிறது..
அது நாமாக இல்லாத பட்சத்தில் சுவர்களோடு பற்று கொள்கிறார்கள்..
அதில் சுகம் காண்கிறார்கள்..
அஞ்சலியில், அஞ்சலி தன் அம்மாவை உணராத தருணம் சுவரையே தன் துணையாக கொள்கிறாள்..
நந்தலாலாவில் அம்மாவே கைவிட்டதாய் எண்ணிக் கொண்டிருக்கும் மிசுக்கினுக்கும் சுவரே துணையாய் இருக்கிறது..
அவர்கள் மட்டும் அல்ல..நம்மில் நிறைய பேர்..
தனிமையில் நடக்கும் பொழுது..
தன்னை மறந்த பொழுது..
அருகில் யாரேனும் இருப்பினும் உண்மையான அரவணைப்பை தேடும் பொழுது..
மாலை இரவாகியது கூட தெரியாத பொழுது..
சுவரில் வழியும் மழை துளியை தன்னுள் ஏற்றுக் கொள்ளும் பொழுது..
நகத் தூரிகையால் சுவர்களில் ஓவியங்கள் வரையும் பொழுது..
பொய் பேச்சுகளை நகக்கீறல் சத்தங்களால் வெல்லும் பொழுது..
காதலியின் பெயரோ காதலனின் பெயரோ அழகிய கோலங்களாய் மாறும் பொழுது..
நகக்கண்ணின் ரத்தம் கண்ணீராய் மாறி வடிவம் பெறும் பொழுது..
எனப் பல்வேறு தருணங்களில்
சுவர்களில் அரவணைப்பை காண்கிறோம்..



No comments:
Post a Comment