Friday, 31 March 2017

யாருக்கு வேண்டும் உன் சிலை ?


படிதாண்டிய போதே தலை தட்டி
கால்கட்டி வைத்திருப்பின்,
நன்றாய் வாழ்ந்திருப்பாயே ! படிதாண்டா பத்தினியே !
யாருக்கு வேண்டும் உன் சிலை ?
வேற்றூர் மக்களுக்கே நீ அதிசயவள்..
அவர்களும் இங்கு வந்து உன்னை காணும்வரையே..

ஆண்மக்களை படிதாண்டாமல் காக்கிறாயோ?
இரும் அம்மா..சிரித்து கொள்கிறேன்
எங்களுக்கு தேவையோ ஓர் பலிகடா !
வாய்சொல்லிலும் இலக்கியத்திலும் மார்தட்டிக் கொள்ள..
இல்லையெனில் என்றோ காலயந்திரம் கொண்டு
உன்னை காப்பாற்றியிருப்போம் அல்லவா ?

உந்துதல்: வைரமுத்துவின் 'கருப்பு நிலா' கவிதை

படத்தை கடன் அளித்தவர்http://tamilnation.co/diaspora/tamilnadu/060606kannagi.htm

No comments:

Post a Comment