Wednesday, 22 March 2017

மாம்பழ மழை


கொய்யா
மாதுளை
ஆப்பிள்
ஆரஞ்சு
என்று விதம் விதமாய்
தினம் ஒரு பழம் தருவாள்..

அவளுக்கு ஏதேனும் வாங்கி தந்தாள்
வாங்கி கொள்ள மாட்டாள்..
காரணம் உரைக்காமல்
மாதுளைகளை சிந்திச் செல்வாள்..

பின்பு ஒருநாள்
அவள் கொடுத்த பழங்களை வைத்து
ஓர் பொம்மை செய்து
என் குழந்தையிடம் விளையாட கொடுத்தேன்..
அதை தின்ற குழந்தை
'நல்லா இருக்குதுப்பா. இன்னொன்னு?' என்றாள்

அவள் காலடி தடங்களை தேடி
தோப்புகளிலும் பழக்கடைகளிலும் அலைந்தேன்..
அலைந்து சோர்ந்து வானத்தை வெறிக்க..
அங்கோர் மேகம் மாம்பழம் போல்
உருவம் கொள்வதாய் தோன்றிட..
பெருமூச்சு விட்டேன்.

அதுவோ வானத்திடம் சென்று
செய்தி சொல்ல..
அம்மேகம் அவள் வீட்டின் தாழ்வாரத்தில்
மாம்பழங்களை கொட்ட ஆரம்பித்தது..

படத்தை கடன் அளித்தவர்http://craniumbolts.blogspot.in

No comments:

Post a Comment