Wednesday, 22 March 2017

வா மகனே..நீச்சல் கற்று தருகிறேன்


மகனே..
உனக்கு கீழே ஓடிக் கொண்டிருந்த ஆற்றின் ஆழ சூழலில்
என் பாட்டனை தொலைத்தேன்..
அவ்வாற்றைத் தோண்டித் தோண்டி என்னைத் தொலைத்தேன்..
விசனப்படாதே மகனே..
அக்கட்டிடத்தில் இருந்து குதித்து விடு ..
பறவையாய் பறந்து வந்து
என் நெஞ்சை கிழித்து
ஏனென்று கேள்..
என் தாத்தனை மட்டும் கேட்டு விடாதே..
அவனோ,
அவ்வாற்றில்
நான் உனக்கு நீச்சல் கற்றுத் தருவதாய்
நினைத்துக் கொண்டிருக்கிறான்..

No comments:

Post a Comment