Friday, 26 January 2018

குப்புற படுத்த கவிதைகள் #1

என்ன பண்ணி என்ன பண்ணனு 
குப்புற படுத்து தூங்கி போனேன்..
நெஞ்சு எரிஞ்சு..
நேர் கீழ பாயும் எரிஞ்சு போச்சு..
தரைல கெடந்த மார்கழி குளிரு 
சிக்குனான் ஒருத்தன்னு சொகமா நெஞ்சுல ஏற..
சளி புடிச்சுப்போச்சு..
அதனால பொண்டாட்டியே..
நைட் சிப்டு போன பொண்டாட்டியே..
காலைல வரப்போ சளி மாத்திரையும்..
அப்டியே உன்ன மாதிரி கொழுகொழுனு 
ஒரு பஞ்சடச்ச தலகாணியும் வாங்கியாடி..

Tuesday, 9 January 2018

ஆம்பள டால்பின்தான?

டால்பின்ஸ் கூட நீந்திட்டு இருந்த சேக்கப்
டால்பினா கரை ஒதுங்குனார்..
'டால்பின்ஸ் எவ்ளோ அழகா நீந்துது தெரிமா' னு அவர் சொன்னப்ப..
எங்கிருந்தோ ஒருத்தன் 'ஆம்பள டால்பின்தான?' னு கேக்க..
அட்ரியனோ 'அது தாவி தாவி நீந்துற டால்பின்' னு சொல்லி..
அந்த டால்பின வீட்டுக்கு தூக்கிகிட்டு போனான்..
அங்க ரெண்டு ஜோடி புறாக்கள் களவியில் இருந்தன..
மொட்டை தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சு போட்டாச்சு..