Friday, 26 January 2018

குப்புற படுத்த கவிதைகள் #1

என்ன பண்ணி என்ன பண்ணனு 
குப்புற படுத்து தூங்கி போனேன்..
நெஞ்சு எரிஞ்சு..
நேர் கீழ பாயும் எரிஞ்சு போச்சு..
தரைல கெடந்த மார்கழி குளிரு 
சிக்குனான் ஒருத்தன்னு சொகமா நெஞ்சுல ஏற..
சளி புடிச்சுப்போச்சு..
அதனால பொண்டாட்டியே..
நைட் சிப்டு போன பொண்டாட்டியே..
காலைல வரப்போ சளி மாத்திரையும்..
அப்டியே உன்ன மாதிரி கொழுகொழுனு 
ஒரு பஞ்சடச்ச தலகாணியும் வாங்கியாடி..

No comments:

Post a Comment