Saturday, 9 May 2015

நான் கவிதைகள்(!) மற்றும் கருத்துகள்(?) என எண்ணும் சிலபல



மண்டைக்குள்ள வெடி,
மொளச்சுது காதல் செடி.


வாந்தி வந்தா எடுத்துடு,
காதல் வந்தா பண்ணிடு,
அப்டின்றார் போதி தர்மர்.
-
ஒரு தலை காதலன்


அண்ணாச்சி வர்ற விளம்பரம் டேபிள்மேட்,
நீதான் என்னோட சோல்மேட்.
-
ஒரு தலை காதலன்


உனக்கு மெசேஜ் அனுப்பி பதிலை எதிர்பார்த்து நித்தம் தோற்கிறேன்,
பின்பு அந்த தோல்வியிலேயே சுகம் கண்டு நித்தம் ஜெயிக்கிறேன்.
-
ஒரு தலை காதலன்


காதல் ஒரு இச்சைதான்..
வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டுமென்ற இச்சை.
-
ஒரு தலை காதலன்


எனக்கு அவளை பிடித்திருகிறது,
ஆனால் அவளுக்கு என்னை பிடிக்கவில்லை,
ஏனனில் காதலின் முதன் முதல் முரண் ஒரு தலை காதலே...!
-
ஒரு தலை காதலன்


நான் உன்னை காதலிப்பதின் காரணத்தை அறிவாயோ..!
நீ அழகானவள் என்பதால் அல்ல..
எனக்கு பெண்மை தேவைப்பட்டது, அதில் நீயே முதன்மையானவளாய் நிற்கிறாய்..
அவ்வளவே..!
-
ஒரு தலை காதலன்


இன்றாவது உன்னை முழுமையாக காதலித்து விடுவேன் என்ற நம்பிக்கையோடே  நித்தம் எழுகிறேன்,
காதலித்து காதலித்து சோர்ந்து தோல்வியோடே நித்தம் தூங்க போகிறேன்,
பின் கனவிலே முடிவில்லா காதல் வானிலே பயணிக்கிறேன்..
அடுத்த நாளை நோக்கி..


என்னை ஏற்பாய் என நேற்று ஏங்கினேன்,
இன்று ஏங்குகிறேன்,
நாளையும் ஏங்குவேன்,
ஒரு நிமிடம்...
நான் தான் உன்னை கண்ட நொடியிலே உன்னோடு கலந்தேனே..வேறென்ன வேண்டும்?
#
ஒரு தலை காதலன்


தயவு செய்து இனி அவ்வாறு சிரிக்காதே,
கவிதைகளால் நிரம்பியதால்
என் காதலுக்கு என் மனம் அளித்த வந்த memory space முடிந்து விட்டதாக அறிவித்து விட்டது..
ம்ம்ம்ம்ம்...
வேண்டாம் வேண்டாம்...
நீ சிரித்துவிடு,
நான் external memory யூஸ் செய்து கொள்கிறேன்.
-
ஒரு தலை காதலன்


பேய் மழையாய் பெய்ய இருந்த என் காதலை,
மரத்தின் கீழே நின்று தவிர்க்க பார்த்தாய்,
அம்மரத்தின் இலைநுனி மழையாகவேனும் உன்னை வந்தடைவேன்..
இது சத்தியம்.


சமையற்காரரின் வீட்டில் மனைவி சமைக்கும் இடத்தில்
அடக்குமுறை திணிக்கப்படுகிறது.


சொந்த ஊரில் உறவுமுறை குழந்தைகள் அடையாளம் தெரியாத ஏலியனாய் பார்க்கும் இடத்தில்,
பீட்சா சுவையும் சத்யம் தியெட்டர் சந்தோசமும் தூளாகி விடுகின்றன.


ரோட்ல கெடக்கற குப்பைய எடுத்து போட்டா காந்திசம்..
அதே போட்டவன் கழுத்துல கத்திய வெச்சு த்தா எட்ரானு சொன்னா கம்யுனிசம்.


மீனு மெரளுது.
தவள தாவுது,
நெஞ்சு நழுவுது,
காதல் கவ்வுது,
மொத்ததுல வாழ்க்க விக்கிக்குது .


காத்து அடிக்கயில,
உன் கூந்தல் அசைகயில,
என் மனசு எகிறி பறக்கயில,
மூனெழுத்து வார்த்த மண்டைல வெடிக்கைல,
பிறந்தேனடி புதுசா,
உணர்ந்தேனடி முழுசா.


பார்த்தவுடனே விழுந்தேன்,
நினைத்த போதெல்லாம் பறந்தேன்,
பின்பு உன்னிடம் சொன்னால் விழுவேனோ என பயக்கிறேன்..!
வேண்டாம் உயர பறக்கா விட்டாலும் பறந்து கொண்டாவது இருக்கிறேன்.
#ஒருதலைக்காதல்


தானா தேடி வரதுக்கு காதல் ஒன்னும் உன் வீட்டுக்கு வர்ற நியூஸ்பேப்பர் இல்ல மச்சி,
அந்த நியூஸ்பேப்பர்ல வர்ற நியூஸ் மாதிரி..தேடித்தான் போகணும்.


அவள்: என்னை விட்டு சென்று விடுவாயா?
அவன்: ஆம். நான் இறக்கும் பொழுது.உடலால் மட்டுமே
#இரண்டு வரி காதல் கதைகள்


வானத்துல புல் இருந்தா மானும் பறக்குமாம்,மனுசனும் பரப்பானாம்..
ஆனா எந்த புல்லு இருந்துச்சு யாரு பற ந்தாங்கறதுதான் மச்சி மேட்டரே..!
(Thanks to “Oru Kanniyum moonru alavaanigalum” movie for the inspiration to this)


பொண்ணு கேரக்டரும் நல்லா இருக்கணும்,
பாக்கறதுக்கும் அழகா இருக்கணும்.
#அப்போ நீ கடைசி வரை சந்நியாசியாதான் இருக்கணும்


அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என எனக்கு உணர்த்தியவளே,
என் அகத்தில் அழகாய் வந்து முகம் காமிப்பது எப்போ?


நாம் கட்டிய அழகிய வீட்டில்,
நாம் குழந்தைகளாய் மாறும் இசை ததும்பும் ஊஞ்சலிலே,
உன் தோல் சாய்ந்து விரல் பிடித்து முத்தமிடுவேன் நீ இல்லாவிட்டாலும்.
-
ஒரு தலை காதலன்


காதல் ஒரு மெலிசான கோடு.
அந்த பக்கம் போனா கல்யாணம்.
இந்த பக்கம் போனா காதல் தோல்வி.
#ஒரு தல காதலன்:கோடே தெரிலபா கொஞ்சம் அழுத்தி போடுங்க


பசிச்சா சோறு,
பார்ட்டினா பீரு,
உன்ன பாத்தா..
அய்யயோ தாறுமாறு..!


மயக்கும் கவிதை எழுத எண்ணி பேருந்தின் ஜன்னல் கம்பிகளில் சாய்ந்தேன்,
பின்பு அதை கிழிக்கும் காற்றோடு கலந்தேன்..
இறங்க வேண்டிய இடம் கடந்து விழித்தேன்....
பின்பே உணர்ந்தேன்..
காற்றே கவிதையாய் மாறி என்னை மயக்கியதை..


நான் தனிமையில் இருப்பது தனிமையை விரும்பி அல்ல..
உன்னோடு இருக்க முடியாத காரணத்தினாலே.


எந்த புண்ணியமும் செய்யாதனால் நரகமா?
எந்த பாவமும் செய்யாதனால் சொர்க்கமா
#குழப்பத்தில் கடவுள்
#கருவறுக்கப்பட்ட குழந்தை!!


No comments:

Post a Comment