கவிதைக்கு பாடுபொருளாய் உன்னை வைத்து, உன் பிம்பத்தை மனத்துள் நிறுத்தினேன்.
மேகக்கூட்டங்களாய் அலைந்த அக்கண்கள் என்னை நோக்கின.
கவிதை மறந்து காதலாய் கரைந்தேன்
பின்பு நானே கவிதையாய் மாறி உன்னுள் புதைந்தேன்.
என்றேனும் உன்னுள் தளிர்த்து பூர்த்தி செய்வேனடி,
அக்காதல் கவிதையை..