அக்கண்களை திறந்து மூடி,
சொர்கத்திற்கும் நரகத்திற்கும் அலைகலைக்கிறாய்.
பேசாமல் அக்கண்களை மூடித் தூங்கிவிடடி.
உன் கனவுகளில் நாயகனாய் வந்து,
மரம் தழைத்துப்பின் நிர்வாணமாகும்வரை காதல் செய்து,
பின் ஓர் அதிகாலைபொழுதில் உன்னை கவர்ந்து செல்வேன்.
அதுவரை, பகற்பொழுதில் தூங்கி விடாதடி
என் கனவுகளின் நாயகியே!!
No comments:
Post a Comment