Monday, 7 September 2015

பௌர்ணமிப் பறவை

அமாவாசை முடிந்தது;
மனக்கலக்கம் தெளிந்தேன்.
வளர ஆரம்பித்தது;
நடக்க ஆரம்பித்தேன்.
பௌர்ணமியை அடைய விரும்பியது;
அடைய ஆசைப்பட்டேன்.
பின்பு பறவையாய் பறக்க ஆசைப்பட்டது;
பின்பு கவர்ந்து செல்ல துடித்தேன்.
பௌர்ணமி வந்தது;
நெருங்கினேன்.
பறக்க இறக்கை வேண்டாமென யோசித்தது;
வரா வார்த்தைகளை வெளிக்கொணர முற்ப்பட்டேன்.
அமாவாசை வந்து விட்டது;
இறக்கை அடித்து என்னைவிட்டு பறப்பதாய் உணர்ந்தேன்.
அடுத்த பௌர்ணமியை எதிர்நோக்க ஆரம்பித்தது;
பிந்தொடர்ந்து பறக்க ஆரம்பித்தேன்.

No comments:

Post a Comment