Thursday, 10 September 2015

மழைப் பெண்ணே !!


முதல் துளி மழையின் ஸ்பரிசமாய் என்னுள் நுழைந்தவளே,
பின் சிறுதூறலாய் என்னுள் பரவினாயே,
சிறுமின்னலாய் கண்சிமிட்டி இதயத்துள் இடி பரவச் செய்தவளே,
பேய்மழையாய் என் காதலை பெய்வேனடி,
குடைகொண்டு மறுத்துவிடாதே,
என் இதயக்கூட்டினில் அடைக்கலம் தருவேனடி,
அதிலே நுனிப்புல்லாய் நம்காதல் தளிர்க்குமேயடி..

No comments:

Post a Comment