Wednesday, 15 March 2017

திருவான்மியூர் கடற்கரையில் 'மணிரத்னம்' ஆன கடவுள் (கதையும் கவிதையுமாய்(??) ஓர் புனைவு)


கடவுளுக்கும் எனக்கும் ஓர் ஒப்பந்தம்
எனக்கான 'அவளை' எனக்கு அறிமுகப்படுத்தும் காட்சியை
நானே அமைப்பதாய்..
நான் பதிலுக்கு குல்பி வாங்கி கொடுப்பதாய்..

நான் காட்சியை விளக்க
கடவுள் மணிரத்னம் ஆக:

ஓர் கடலும்
அதற்கு ஒட்டிய சிறிய வீடும்
அதன் கதவுகளை சதா தட்டும் அலைகளும்
அலைகளை அடக்கி வாசிக்க சொல்லும் சத்தமும்..

பின் அவ்வீட்டிற்கு ஓர் மொட்டை மாடியும்
அதில் ஓர் மஞ்சள் கொடிக்கயிறும்
அதில் என் சிவப்புச் சட்டையும்
என காட்சி இடம் நிறுவப்பட..

பின்
கீரோ பிரவேசத்திற்காக
குளிர் காற்றும்
சிறு தூறலும்
வரவழைக்கப்பட..

Action என கடவுள் கதற..

சட்டை எடுக்க என் ஓட்டமும்
அகப்படா சட்டையை அடக்கும் முயற்சியும்(கீரோ ஏதாவது அடக்கி ஆகணும்ல)..

அந்நேரத்தில் சட்டை கண்களுக்கு மேலாய் எகிற
'கீரோயினிய வர சொல்லுங்க' என கடவுள் எகிற..

எதிர் வீட்டில் சட்டைக்கு பதிலாய் சுடிதாரும் (தாவணி இருந்திருக்கலாம்)
அதன் பச்சை நிறமும்
பின்னே ஓர் பச்சை கிளியும் (கவிதை கவிதை)
அவளின் சுடிதார் அடக்கும் விளையாட்டும்
என நீள..

அடேய்..இப்டி நேரமாக்கினா 
Audience தம் அடிக்க போய்டுவாங்கடா
வாயு பகவானை நல்லா ஊத சொல்லுடா
என கடவுள் ஒரு காட்டு காட்ட..

சுடிதார் இன்னும் சற்றே தூக்க
அவள் உதடு கீற்றுகள் தோன்ற..

'டேய் தம்பி..மணி பதினொன்னுக்கு கண்ண மூடி
மேல என்ன பராக்கு பாக்குற..
மணி ஆச்சு..
கெளம்பு கெளம்பு'

என
திருமணமான (அதெல்லாம் பாத்தாவே தெரிஞ்சுடும்) காவலர்
திருவான்மியூர் கடற்கரையில் விரட்ட..

கனவில் கூட உன்னை காணாத தினமது..
என் கடவுள் நம்பிக்கை தொலைந்த தினமது..

பி.கு 1: இந்த காட்சியமைப்பு விசயங்கள் பிடித்து போன கடவுள்தான் இந்த மண்ணில் 'மணிரத்தினம்' என்ற பெயரில் பிறந்து காட்சிப் படங்கள் எடுத்தார் என்பது வேறு கதை..மொத்தத்துல மணிரத்னம் உருவாக காரணமே நான்தான்னு வெச்சுக்குங்க :D :D

பி.கு 2: இது புனைவு என்பதை மீண்டும் நினைவில் கொள்ளுங்கள் (அடிக்க வருவாய்ங்களோ??)

படத்தை கடன் அளித்தவர்http://www.glazzeye.blogspot.in/

2 comments:

  1. அருமை!! அதே நேரம் மெரினால ஒரு AR Rahman உருவாகிக்கொண்டிருந்தார்!!

    ReplyDelete